நடப்பு நிலவரம்:

1) பொருளாதார வளர்ச்சி என்பது பொருள்கள், சேவைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வில் ஏற்படும் வளர்ச்சி என்று பொருளாதார நூல்கள் வரையறுக்கின்றன.

2) பொருள்கள் உற்பத்தியும் தனி நபர் நுகர்வும் அதிகரிக்கும்போது பொருளாதாரமும் அதிகரிக்கிறது.

3) விவசாயம், மறு உற்பத்தி, உற்பத்தி, சேவைத் துறைகளுக்குத் தேவைப்படும் உற்பத்தி சாதனங்கள் மற்றும் கழிவு உற்பத்தி இவை அடங்கிய அனைத்தும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த முறையில் உலகப் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது.

4) உண்மையான உள்நாட்டு மொத்த உற்பத்தி (gross domestic product- GDP) அதிகரிப்பு அல்லது தேசிய மொத்த உற்பத்தி அதிகரிப்பு இவற்றைக் கொண்டு பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக பெரும்பாலும், குறிப்பிடப்படுகிறது; மேலும் ;

5) பல சமுதாயங்கள் மற்றும் பெரும்பாலான அரசுகளின் முதன்மையான, நீடித்த இலக்காக பொருளாதார வளர்ச்சி உள்ளது. மேலும் ;

6) வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் சுற்றுச்சூழல் கோட்பாடுகளின் அடிப்படையில், பொருளாதார வளர்ச்சிக்கு வரையறை உண்டு, மேலும் ;

7) உலகப் பொருளாதார வளர்ச்சி, நீண்ட கால அடிப்படையில் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நலவாழ்வு ஆகியவற்றின் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதற்கான நிரூபணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன,

எனவே, இந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம் :

1) பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இருண்டிற்கும் இடையே அடிப்படை முரண்பாடு உள்ளது. (உதாணமாக பல்லுயிர்ப் பாதுகாப்பு, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையான காற்று, நீர், சுற்றுப்புற உறுதித்தன்மை), மேலும் ;

2) மனிதப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கு இடையே அடிப்படை முரண்பாடு உள்ளது. (உதாரணமாக, மகரந்த சேர்க்கை, மக்குதல், தட்பவெப்ப நிலை கட்டுப்பாடு), மேலும் ;

3) தொழில்நுட்ப முன்னேற்றம் பலவிதமான நேர்மறை மற்றும் எதிர்மறை சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இவை பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்ட கால சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நலவாழ்வு இவற்றுக்கிடையே உள்ள தவிர்க்க முடியாத முரண்பாட்டைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் ;

4) அதிகரித்து வரும் உள்நாட்டு மொத்த உற்பத்தியைக் கொண்டு மதிப்பிடப்படும் பொருளாதார வளர்ச்சி, குறிப்பாக வலம் கொழிக்கும் பணக்கார நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி, அதிகரித்துவரும் ஆபத்தும் காலத்துக்குப் பொருந்தாததும் ஆகும்;

5) ஒரு உறுதியான நிலையிலுள்ள பொருளாதாரம் (அதாவது, ஒப்பீட்டளவில் உறுதியான, மிதமான ஏற்ற இறக்கமுள்ள மக்கள் தொகை மற்றும் தனி நபர் நுகர்வு இவற்றுடன் கூடிய) என்பது வளர்ந்துவரும் பொருளாதாரத்திற்கு சாத்தியமான ஒரு மாற்று என்பதோடு பெரிய, வளமான பொருளாதாரங்களில் பொருத்தமான இலக்காகவும் மாறிவருகிறது. மேலும் ;

6) வறட்சி மற்றும் ஆற்றல் பற்றாக்குறைகள் போன்ற எதிர்பார்த்த, எதிர்பாராத காலங்களில் பொருள்களின் உற்பத்தி ஸ்தம்பிக்கும் சூழல்களில் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலவரத்தில் ஏற்படக்கூடிய இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் பொருளாதாரம் சிறிய அளவில் நிறுவப்பட வேண்டும். இது நீண்ட காலம் நிலைத்திருக்கும் உறுதியான பொருளாதார நிலவரத்திற்குத் தேவையான ஒன்று. மேலும் ;

7) ஒரு உறுதியான பொருளாதார நிலவரம் பொருளாதார வளர்ச்சியை தடுப்பதில்லை, இது உயிரோட்டமுள்ள, தரமான செயல்பாடு. இதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதோடு மேலும் அது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரத் துறைகளும் உருவாகலாம்.

8) உறுதியான பொருளாதார நிலையை உருவாக்க, பணக்கார நாடுகள் பொருளாதா வளர்ச்சி இலக்கு என்பதிலருந்து உறுதியான பொருளாதார நிலை என்ற இலக்கிற்கு மாறப் பிற நாடுகளுக்கு உதவலாம். தற்போது உயர் அளவிலான தனி நபர் நுகர்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் நாடுகளிலிருந்து இவற்றைத் தொடங்கலாம்.

9) மிகப் பரவலாக வறுமை நிலவும் நாடுகளுக்கு, தனி நபர் நுகர்வு அதிகரிப்பு (அல்லது, மாற்றாக, மேலும் நியாயமான, சமமான செல்வப் பகிர்வு) என்பது பொருத்தமான இலக்காக உள்ளது.

Sign the position.